Local News
பதுளையில் பரபரப்பு: போதனா வைத்தியசாலை நிபுணர் திடீர் மாயம் - கால்வாயில் கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு!
By AdminAugust 24, 2026

பதுளையில் பரபரப்பு: போதனா வைத்தியசாலை நிபுணர் திடீர் மாயம் - கால்வாயில் கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு!
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மயக்கவியல் நிபுணத்துவ வைத்தியர் ஒருவர் நேற்று (23/08/2026) காலை பணியில் இருந்தபோது திடீரென காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக திகழும் வைத்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன வைத்தியரின் கார் மகியங்கனை நோக்கி வேகமாக செல்வது மீகஹகிவுல பகுதியில் உள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலின் போது, பதுளை - மகியங்கனை வீதியில் மாபாகடவெவ பகுதியில் உள்ள கால்வாய் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
49 வயதான இந்த மருத்துவரின் உடல், மஹியங்கனை, மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள ஒரு புதர் நிலத்தில் இன்று பாறை மேல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவர் தொடர்பில் அறிய பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர், இதன் போதே இவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மூன்று வகையான மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து மஹியங்கனை பொலீசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.