Local News

ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்யாலயத்தில் சர்வதேச யோகா தினமும் கணிதப் பயிற்சிப் பட்டறையும் சிறப்பான முறையில் ஏற்பாடு!

By கஜன்June 22, 2026
ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்யாலயத்தில் சர்வதேச யோகா தினமும் கணிதப் பயிற்சிப் பட்டறையும் சிறப்பான முறையில் ஏற்பாடு!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஹொப்டன் பது/கலைமகள் தமிழ் மகா வித்யாலயத்தில் யோகா தின நிகழ்வுகளும், மாணவர்களுக்கான விசேட கணிதப் பயிற்சிப் பட்டறையும் இன்றைய தினம் (22) பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன . இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராகப் பசறை வலயக் கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. கவிதாஞ்சலி கலந்துகொண்டு சிறப்பித்தார். இவரோடு பாடசாலை அதிபர் திரு. வடிவேல் நிரோஷன், உப அதிபர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் முன்னிலை வகித்திருந்தனர். ஆரோக்கியம் வளர்க்கும் யோகாசனப் பயிற்சிகள் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த யோகாசனப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, அவர்களுடன் இணைந்து பாடசாலை ஆசிரியர்களும் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. ‘ஸ்கந்தராஜா’ அரங்கில் கணிதப் பயிற்சிப் பட்டறை யோகா நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களின் கணித ஆளுமையையும் தர்க்கரீதியான சிந்தனையையும் விருத்தி செய்யும் நோக்குடன் விசேட கணிதக் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பாடசாலையின் ‘ஸ்கந்தராஜா’ அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் அமைந்ததாகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.