Local News

உலக சாதனை நிகழ்வில் மலையக மண்ணிற்குப் பெருமை சேர்த்த நவரத்னமஹால் நாட்டியாலயாவிற்குப் பாராட்டுக்கள்!

By கஜன்June 17, 2026
உலக சாதனை நிகழ்வில் மலையக மண்ணிற்குப் பெருமை சேர்த்த நவரத்னமஹால் நாட்டியாலயாவிற்குப் பாராட்டுக்கள்! கடந்த 2026.06.14 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைபெற்ற மாபெரும் உலக சாதனை நடன நிகழ்வில், எமது பிரதேசத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு முத்திரை பதித்துள்ளனர். வெளிமடை, லுனுவத்தை மற்றும் உடப்புஸ்ஸலாவ ஆகிய பகுதிகளில் ஆன்மீகத்தோடும் கலை நயத்தோடும் இயங்கி வரும் ‘நவரத்னமஹால் நாட்டியாலயா’ நடனப் பள்ளியின் நிறுவனரும், ப/கம்பா தமிழ் மஹா வித்தியாலயத்தின் மதிப்பிற்குரிய நடன ஆசிரியருமான திருமதி ஜனனி லோகேஸ்வரன் அவர்களும், அவர்தம் ஆற்றல்மிகு மாணவச் செல்வங்களும் இந்த உலக சாதனைப் பெருவிழாவில் பங்கேற்றுத் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பரதக்கலையின் பாரம்பரியத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி, மலையக மண்ணிற்கும் எமது கலைக் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்த குரு திருமதி ஜனனி லோகேஸ்வரன் அவர்களுக்கும், நாட்டியாலயாவின் மாணவச் செல்வங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றோம். கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கட்டும்! சாதனைகள் பல குவியட்டும்!