Local News

DSI கரப்பந்தாட்ட போட்டியில் ப/பிங்கராவ தமிழ் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை! ⚡

By செய்தி -கஜன்June 17, 2026
DSI கரப்பந்தாட்ட போட்டியில் ப/பிங்கராவ தமிழ் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை! ⚡
DSI கரப்பந்தாட்ட போட்டியில் ப/பிங்கராவ தமிழ் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை! ⚡ ஊவா மாகாணத்தில் உள்ள நமுனுகுல, ப/பிங்கராவ தமிழ் வித்தியாலய மாணவர்கள் DSI மாகாண மட்ட கரப்பந்தாட்ட (Volleyball) தொடரில் அசத்தலான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெரும் பெருமை சேர்த்துள்ளனர்! 🏆 சாதனைகளின் விபரம்: 17 வயதிற்குட்பட்ட பிரிவு (U/17): ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலாமிடத்தைப் (Champions) பெற்றுக்கொண்டதோடு, தேசிய மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்! 🥇🏐 15 வயதிற்குட்பட்ட பிரிவு (U/15): கடும் சவால்களுக்கு மத்தியில் திறமையாக விளையாடி மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தமதாக்கினர்! 🥉 👏 சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! மிகக் குறைந்த வசதிகளுடன், கடின உழைப்பையும் அசாத்திய திறமையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மாகாண மட்டத்தில் தடம் பதித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள எமது பிங்கராவ தமிழ் வித்தியாலய சிங்கங்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்குமா மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 🎉 செய்தி -கஜன்