Local News

கேதீஸ்வரன் செய்த நற்காரியம்!

By AdminJune 5, 2026
கேதீஸ்வரன் செய்த நற்காரியம்!
யாழில் கடுமையான நோய்களால் அவதிப்பட்டுக் குணமடைந்த கேதீஸ்வரன் செய்த நற்காரியம்! குடலில் ஏற்பட்ட கடுமையான நோய் மற்றும் கடுமையான வயிற்றுப் பகுதித் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தமைக்கு நன்றியறிதலாக எல்.கேதீஸ்வரன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து பெறுமதியான மருத்துவ உபகரணமொன்றை இன்று (05.06.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார். சுற்றுச் சூழல் மீது அக்கறை கொண்டவராகிய கேதீஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பூக்கும் மரங்களை நடுவதன் மூலம் நோயாளிகள், பார்வையாளர்கள், பணியாளர்களுக்கு அழகானதும், மன அமைதியளிப்பதுமான சூழலை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எனக்கொரு புதிய வாழ்க்கையை வழங்கியது. என்னைக் கவனித்த மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனக் கேதீஸ்வரன் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். See le